ஐரோப்பிய கண்டத்திலுள்ள பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரமன் பிரடாசேவிச், சினிமா பாணியில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டார். பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாசென்காவின் அடக்குமுறை அரசை எதிர்த்து, கடந்த சில ஆண்டுகளாக தனது வலைப்பக்கத்தில் செய்திப் பதிவுகளை ரமன் வெளியிட்டு வந்துள்ளார்.
இதையடுத்து ரமன் மீது அதிருப்தியடைந்த பெலாரஸ் அரசு அவரை யாரும் எதிர்பாராத முறையில் கடத்திக் கைது செய்துள்ளது. கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரிலிருந்து லிதுவேனியா நாட்டிற்கு 'ரயன் ஏர்' என்ற பயணிகள் விமானத்தில் நேற்று(மே 26) ரமன் பிரடாசேவிச் கிளம்பியுள்ளார். பெலாரஸ் நாட்டை வான்மார்க்கமாக விமானம் கிளம்பிச் சென்றபோது விமான ஓட்டிக்கு வெடிகுண்டு அபாயம் உள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
இதையடுத்து, பெலாரஸ் நாட்டில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது விமானத்திற்குள் அதிரடியாக நுழைந்த அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் ரமனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாசென்காவின் நேரடி உத்தரவின்பேரில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
'மனித உரிமையைப் பறிக்கும் விதமாக அதிபர் லுகாசென்கா நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. பெலாரஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத்தடை விதித்ததை நான் வரவேற்கிறேன். பெலாரஸ் மக்களின் உரிமைக்குரலுக்கு அமெரிக்கா என்றும் துணை நிற்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா கண்டத்தில் எஞ்சியிருக்கும் ஒரே சர்வாதிகாரி பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாசென்கா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாலி நாட்டின் அதிபர், பிரதமர் கைது - ராணுவம் அதிரடி!