அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் 'மனைவி மெலனியா ட்ரம்ப்பிற்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நாங்கள் தனிமையில் உள்ளோம்' என ட்ரம்ப் கூறியுள்ளார்.
தனது நண்பரான ட்ரம்ப்பும் அவரது மனைவியும் விரைவில் உடல்நலம் தேறி குணமடைய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ட்ரம்ப்பின் உதவியாளர் ஹாப் ஹிக்ஸ் என்பவருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, ட்ரம்ப்பும் அவரது மனைவியும் தனிமைப்படுத்திக்கொண்டு கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ட்ரம்ப் தற்போது தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். கடந்த செப்.29ஆம் தேதி க்ளீவ்லேண்ட் நகரில் நடைபெற்ற அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் முதல் விவாதத்தில் பங்கேற்ற ட்ரம்ப்புடன், ஹிக்ஸும் உடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல் விவாதத்தில் எனக்குத்தான் வெற்றி - அடித்து கூறும் ட்ரம்ப்