திபெத்திய மதகுருவான தலாய்லாமாவின் வாரிசை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் தலையிடும் சீன அலுவலர்களின் அமெரிக்க சொத்துக்கள் முடக்கப்பட்டு, பயணத் தடை விதிக்கும் மசோதாவை அமெரிக்க பிரதிநதிகள் சபை தாக்கல் செய்துள்ளது
திபெத்திய தலைநகர் லாசாவில் அமெரிக்கத் தூதரகம் அமைக்க ஏற்கனவே சீன அரசு மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், செனட் சபையால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டால் அமெரிக்க அரசும் சீன தூதரகங்கள் அமைக்க தடை கோரும்.
சீன அரசாங்கம் திபெத் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், திபெத்திய மதகுருவான தலாய்லாமாவின் நியமனம் முழுமையாக அந்நாட்டின் மத விவகாரம் என்றும், வரவிருக்கும் 15ஆவது தலாய்லாமா நியமனத்தில் தலையிட வேறு நாடுகளுக்கு உரிமையில்லை என்றும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீன அரசாங்கத்தின் சார்பில், தலாய்லாமா நியமனத்தில் தலையிடும் எந்தவொரு சீன அலுவலரின் அமெரிக்க சொத்தும் முடக்கப்படும் மற்றும் அமெரிக்க பயணத்தின் மீது தடை விதிக்கப்படும் என்றும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பிரதிநதிகள் சபையில் பேசிய அதன் சபாநாயகர் நான்சி பெலோசி, ’திபெத்தின் ஆன்மிக, கலாசார விவகாரங்களில் சீன அரசாங்கம் தலையிட்டால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து இந்த மசோதா சீன அரசாங்கத்திற்கு தெளிவாக விளக்கியுள்ளதாக’ தெரிவித்தார்.
மேலும், சீன - அமெரிக்க உறவை வலுப்படுத்தவே தாங்கள் விரும்புவதாகவும், அதே நேரம் சீன நாட்டு மக்களின் மனித உரிமைகளை அந்நாட்டு அரசு மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திபெத்திய பீடபூமியின், சுற்றுசூழல் மற்றும் நீர் வளங்களைப் பாதுகாப்பது குறித்தும் இந்த மசோதாவில் விவாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்க - சீனா உறவும் வளரும் நாடுகளும்!