உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிதீவிரம் அடைந்துள்ளது. கரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 11 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்த சூழலை பயன்படுத்திக் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுவருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் கூற்றுக்கு ஏற்றப்படி, சீனா, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள இந்தியாவிற்கு சொந்தமான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளை ஐந்து கிமீ அளவுக்கு ஆக்கிரமித்துள்ளது.
இதுதொடர்பாக, இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுக நிலையை எட்டியதையடுத்து, சீன ராணுவம் இந்திய எல்லையில் இருந்து பின் வாங்கியது.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்றை பயன்படுத்தி இந்திய நிலங்களை அபகரிக்க சீனா முயற்சிப்பதற்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.