அணு ஆயத பயன்பாடு தொடர்பாக வட கொரியாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின் இந்த விவகாரம் குறித்து இரு தரப்பு சமசரசத்திற்கான முன்னெடுப்புகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓப்ரின் வட கொரிய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் பேசிய அவர், கடந்த மூன்றரை வருடங்களாக வட கொரியாவுடனான மோதல் போக்கு குறைந்து முன்னேற்ற பாதையில் அமெரிக்கா செல்கிறது. பொருளாதார ரீதியாக வட கொரியா முன்னேற்ற பாதை நோக்கி செல்ல விரைவில் அணு ஆயுத குறைப்பு நடவடிக்கையை நிறைவு செய்யும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
வட கொரியாவின் தீவிர அணு ஆயுத பரவல் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்க அரசு விதித்துள்ளது. பேச்சுவார்த்தையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்பட்சத்தில் இந்த தடைகள் விலக்கிக்கொள்ளப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 2,000 தலிபான் கைதிகளை விடுவித்த ஆப்கான் அரசு