ETV Bharat / international

இந்திய-பசிபிக் கடலில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் ரோந்து! - US China corona dispute

வாஷிங்டன்: இந்திய-பசிபிக் கடல் பகுதியில் மூன்று அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுவருவது உலக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

US plane
US plane
author img

By

Published : Jun 13, 2020, 5:27 PM IST

கரோனா பரவல், ஹாங்காங் தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய விவகாரங்களால் அமெரிக்கா-சீனா இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. இந்தச் சூழலில், இந்திய-பசிபிக் கடல் பகுதியில் மூன்று அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றன.

இவற்றுக்குப் பாதுகாப்பாக அமெரிக்கக் கடற்படை போர்க் கப்பல்கள்(க்ரூசர் மற்றும் டெஸ்டிராயர்கள்), போர் விமானங்கள் உடன் செல்கின்றன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா மேற்கொண்டுவரும், இந்த அசாதாரண நடவடிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து 'Center for Strategic and International Studies' என்ற ஆய்வு நிறுவனத்தின் China Power Project துறையில் இயக்குநரான போனி கிளாசர் கூறுகையில், "கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமெரிக்காவின் ராணுவப் பலம் குறைந்துவிட்டதாகச் சீன அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுத்துள்ள சூழலில், அது தவறு என்பதைச் சுட்டிக்காட்டவே அமெரிக்கா இதனைச் செய்துவருகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்திய-பசிபிக் கடல் எல்லை பிராந்தியத்தின் அமைதியை அமெரிக்கா சீர்குலைப்பதாக, சீனா வேறு மாதிரியான கதையைச் சித்தரிக்கும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க : இ.எம்.ஐ. தவணை சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.