வாஷிங்டன்: ஆப்கான் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க படை கடந்த சில நாள்களாக வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இதனை பென்டகன் அமைப்பும் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள பென்டகன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர், "ஆப்கான் தேசிய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு ஆதரவாக கடந்த சில நாள்களாக நாங்கள் வான் வெளித்தாக்குதலை நடத்திவருகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று நாள்களில் நடத்தப்பட்ட இந்த வான்வெளித் தாக்குதல்களில், ஐந்து தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள 419 மாவட்டங்களில் 212 மாவட்டங்களை தங்கள் ஆளுகைக்குள் தலிபான்கள் கொண்டுவந்துள்ளனர்.
தற்போது, 95 விழுக்காடு படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க திரும்பப்பெற்றுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதியோடு அமெரிக்க படைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈராக் குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழப்பு!