புதிதாக ஆட்சிக்குவரும் ஒரு கட்சியும் அதன் தலைவரும் அதற்கு முந்தைய ஆட்சியாளர்களைக் குறைசொல்வது என்பது நம் நாட்டில் இயல்பாக நடக்கும் ஒரு விஷயம். ஆனால், அமெரிக்காவில் இந்த ட்ரெண்டை தொடங்கிவைத்திருப்பவர் இந்நாள் அதிபர் ட்ரம்ப். இவர் நாட்டின் நிலைமைக்கு முன்னாள் அதிபர் ஒபாமாவை தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர், தொடர்ந்து ஒபாமா என்ன தவறு செய்தார், அவரைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ட்ரம்ப், "அது நீண்ட காலமாக நடந்துவருகிறது. நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பிருந்தே அது நடந்துவருகிறது. அதுதான் ஒபாமாகேட்.
இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது நமக்கு அவமானம். இங்கு என்ன நடந்துள்ளது என்பதையும், இப்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் அனைத்தையும் நான் பார்த்ததில் இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது எனக்குத் தெளிவாகப் புரிகிறது" என்றார்.
அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது அவர் 150 மில்லியன் டாலர்களை ஈரானுக்கு வழங்கியதாகவும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகை அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்பட்டதாகவும் சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இந்தக் குற்றச்சாட்டுகள் 'ஒபாமாகேட்' என்ற அழைக்கப்படுகிறது.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், "கடந்த காலங்களில் நாட்டில் சில பயங்கரமான விஷயங்கள் நடந்துள்ளன. அவை மீண்டும் நம் நாட்டில் நடக்க அனுமதிக்கக் கூடாது. வரும் வாரங்களில், என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
நீங்கள் இதைப் பற்றி நேர்மையாக எழுத வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் தீவினையாக நீங்கள் அப்படி நேர்மையாக எழுத மாட்டீர்கள்" என்றார்.
'ஒபாமாகேட்' என்பது என்ன மாதிரியான குற்றம் என்பது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு நேரடியாகப் பதில் அளிக்க மறுத்த ட்ரம்ப், "அது எந்த மாதிரியான குற்றம் என்று நீங்கள் அறிவீர்கள். இது அனைவருக்கும் தெரியும். செய்தித்தாள்களை முறையாகப் படிப்போருக்கும் புரியும்" என்றார்.
-
OBAMAGATE makes Watergate look small time!
— Donald J. Trump (@realDonaldTrump) May 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">OBAMAGATE makes Watergate look small time!
— Donald J. Trump (@realDonaldTrump) May 11, 2020OBAMAGATE makes Watergate look small time!
— Donald J. Trump (@realDonaldTrump) May 11, 2020
முன்னதாக அதிபர் ட்ரம்ப், 'ஒபாமாகேட்'க்கு முன் வாட்டர்கேட் ஊழல் சிறியதாகத் தெரியும் என்று ட்வீட் செய்திருந்தார். மற்றொரு ட்வீட்டில், ஒபாமாவும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும்தான் அமெரிக்க வரலாற்றிலேயே ஊழல்மிகுந்த நிர்வாகிகள் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
-
Because it was OBAMAGATE, and he and Sleepy Joe led the charge. The most corrupt administration in U.S. history! https://t.co/PTzFvvITh3
— Donald J. Trump (@realDonaldTrump) May 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Because it was OBAMAGATE, and he and Sleepy Joe led the charge. The most corrupt administration in U.S. history! https://t.co/PTzFvvITh3
— Donald J. Trump (@realDonaldTrump) May 11, 2020Because it was OBAMAGATE, and he and Sleepy Joe led the charge. The most corrupt administration in U.S. history! https://t.co/PTzFvvITh3
— Donald J. Trump (@realDonaldTrump) May 11, 2020
வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.