தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த வழக்கில், 2012ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சர்வதேச கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், தற்போது புழல் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கவின் நியூயார்க் காவல் துறையினரால் அந்நாட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கபூர், சஞ்சீவி அசோகன், ரஞ்சித் கன்வர், ஆதித்ய பிரகாஷ், ரிச்சர்டுசாலமன், தீனதயாளன், வல்லபபிரகாஷ், நெயில, பெர்ரி ஸ்மித் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம், அவர்கள் அனைவைரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவுட்டுள்ளது. மேலும் சுபாஷ்கபூர், சஞ்சீவி, அசோகன், தீனதயாளன் உள்ளிட்டோர் சிறையில் இருப்பதால் அவர்களை சட்டப்படி கைது செய்து நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.