கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இது அமெரிக்காவிற்கு சிறப்பான ஒரு நாள். கடின உழைப்பு, தியாகத்திற்கு பிறகு, தற்போது கட்டுப்பாடுகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் அல்லது அதுவரை முகக்கவசம் அணியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.