கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களின் தலைமையிடமான வாட்டிகன் திருச்சபையில், ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியே பேராயர்கள் பிரதிநிதிகளாகச் சேவைபுரிந்துவருகின்றனர். அதன்படி அமெரிக்காவின் தலைமைப் பேராயராக கெவின் பரேல் என்பவர் தற்போது செயல்பட்டுவருகிறார்.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர், காவலர் ஒருவரால் சர்ச்சைக்குரிய விதத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து, வெள்ளிக்கிழமை சிறப்பு பிராத்தனையின்போது பேராயர் கெவின் உருக்கமாகப் பேசியுள்ளார். அப்போது, “ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை நினைத்துக்கூட பார்க்க முடியாது அளவிற்கு கொடூரமான நிகழ்வாகும். திரைப்படம் போன்ற கற்பனையில்தான் இதுபோன்ற கொடூரங்களைக் கேள்விப்பட்டுள்ளோம்.
ஜார்ஜ் மறைவுக்குப்பின் அமெரிக்காவில் உருவாகியுள்ள போரட்டம் 1960-களுக்கு பின்னரும் நாம் இனவெறிக்கான தீர்வை அடையவில்லை என்பதை உணர்த்துகிறது. மனிதர்களின் அடிப்படை பண்பு, உணர்வுகள் குறித்துப் பேசுகிறோம், பிரார்த்தனையின்போது முறையிடுகிறோம்.
நமது வாழ்கையில் அதைக் கடைப்பிடிக்கிறோமா என்ற கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். அமெரிக்க மக்கள் தங்கள் எதிர்காலத்தை அமைதி, சாந்தியை நோக்கி வழிநடத்த இறைவனிடம் பிரார்த்தித்துக்கொள்வோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: போராட்டக்காரர்களுடன் மண்டியிட்ட கனடா பிரதமர்!