அமெரிக்க நாடாளுமன்றம் அருகே பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் மீது கார் ஒன்று, வேகமாக வந்து மோதியுள்ளது. இதில், காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கார் ஓட்டுநர் கத்தியுடன் மற்றொரு காவலரை நோக்கி வந்துள்ளார்.
உடனடியாகச் சுதாரித்துக்கொண்ட காவலர், அந்நபரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதில், காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்றபோது ஏற்பட்ட கிளர்ச்சி கும்பல் தாக்குதலின் காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக அமெரிக்க நாடாளுமன்றம் மூடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற அருகே காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், " நிச்சயம் இது பயங்கரவாத தாக்குதல் மாதிரி தெரியவில்லை. இருப்பினும், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் கொல்லப்பட்ட 305 பேர்: ஆப்கானில் தொடரும் மரணங்கள்