பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி 95 விழுக்காடு வெற்றி பெற்றதாகக் கூறி, அதனை கரோனாவுக்கான மருந்தாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இதனையடுத்து, அவசரகாலப் பயன்பாட்டிற்காக இந்த மருந்தினைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது.
இதனையடுத்து இந்தத் தடுப்பு மருந்து டிசம்பர் 8ஆம் தேதி பிரிட்டன் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. முதற்கட்டமாக, முதியவர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவிலும் பைசர்-பயோஎன்டெக் நிறுவனம் அவசரகாலத்துக்கு பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. இதற்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையின், தடுப்பூசி மற்றும் உயிரியல் பொருட்களுக்கான ஆலோசனை குழு, அனுமதி அளித்து உள்ளது.
இதனையடுத்து பைசர் கரோனா தடுப்பூசி அவசரக் காலப் பயன்பாடாக வரும் வெள்ளிக்கிழமை (டிச.19) முதல் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இது முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...பிரிட்டனில் பைசர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஒவ்வாமை