ETV Bharat / international

மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டி? - பெர்னி சாண்டர்ஸ் விளக்கம்

author img

By

Published : May 13, 2020, 1:41 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்குத் தான் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று ஜனநாயக கட்சியின் பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

Sanders
Sanders

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் பெர்னி சாண்டர்ஸ். இவர் 1991ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார். இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட ஜோ பிடனுடன் களத்திலிருந்தார்.

இருப்பினும், முதன்மைத் தேர்தல்களில் ஜோ பிடனுக்கு ஆதரவு பெருகியது. இதனால் பெர்னி சாண்டர்ஸ் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகினார். மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பை வீழ்த்த ஜோ பிடனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெர்னி சாண்டர்ஸ் பங்கேற்றார். அப்போது அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்று பெர்னி சாண்டர்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. என்னைப் போல மற்றொரு முற்போக்கு சிந்தனையுடைய ஒருவரை அடுத்த முறை நீங்கள் காண்பீர்கள். மீண்டும் அதிபர் தேர்தலுக்கு நான் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே நான் கருதுகிறேன்.

நாட்டிலுள்ள சில முற்போக்குவாதிகளின் கருத்துகளை ஜோ பிடன் காது கொடுத்துக் கேட்பார் என்று நான் நம்புகிறேன். வெறும் முற்போக்குவாதிகளுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது மட்டும் உங்கள் (ஜோ பிடன்) வேலையில்லை.

பெரும் பணக்காரர்களாக இருக்கும் நாட்டின் ஒரு விழுக்காடு மக்களை நோக்கி நாட்டின் பொருளாதாரம் மாறப்போகிறது என்று சொல்ல தைரியம் உடையவர்களாகவும், நடுத்தர வர்க்கத்தினருடன் தொடர்பில் இருப்பவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட அவர் முயன்றார். இருப்பினும், அப்போது அவர் ஹிலாரி கிளின்டனிடம் தோல்வியடைந்தார்.

இதையும் படிங்க: 'ஒபாமாகேட்' - புது புயலை கிளப்பும் ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.