ETV Bharat / international

'சாத்தான்குளம் வழக்கு: உரியவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்' - ஐ.நா. சபை

சாத்தான்குளம் மரணம் தொடர்பாக தெளிவான விசாரணை நடத்தி, குற்றமிழைத்த அனைவரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா. சபை விரும்புகிறது.

sathankulam case
sathankulam case
author img

By

Published : Jul 11, 2020, 1:50 PM IST

சாத்தான்குளம் மரணம் தொடர்பாக தெளிவான விசாரணை நடத்தி, குற்றமிழைத்த அனைவரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை விரும்புவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 19ஆம் தேதி வணிகர்களான தந்தை - மகன் காவல் துறையினர் பாதுகாப்பில் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிபிசிஐடி மிரட்டலால் சாத்தான்குளம் தொடர்பான வீடியோவை நீக்கிய சுசித்ரா!

இந்தியாவில் காவல் துறையினரின் பொறுப்புணர்வை உறுதிப்படுத்த மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பக தெற்காசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறுகையில், "ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது கவனிக்கத்தக்கது. அதேபோல் தான் இச்சம்பவமும். இந்தியாவில் காவல் துறையினரின் பொறுப்புகளையும், பொறுப்புணர்வுகளையும் உறுதிப்படுத்த உயர் மட்ட அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மினியாபோலிஸில் காவல் துறையினரால் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டது அமெரிக்காவில் ஒரு நாடு தழுவிய போராட்டத்தைத் தூண்டியது. இச்சம்பவம் சிறுபான்மையினருக்கு எதிராக காவல் துறையினர் காட்டிய மிருகத்தன்மையைக் காட்டியது. உலகளவில் காவல் துறையினரின் செயல்பாடுகளால் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அவர்கள் கையில் இருக்கும் தண்டனையின் அளவுகோல்களை களைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் இறந்த விவகாரம்: உள்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு..!

சாத்தான்குளம் மரணம் தொடர்பான வழக்கை முன்னிறுத்தி கங்குலி பேசியபோது, "பல நீதிமன்ற உத்தரவுகளும், கைது நடவடிக்கைகளும் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த இரண்டு மரணங்கள் தொடர்புடைய காவல் துறையினர் தண்டிக்கப்படும் பட்சத்தில், பிறருக்கு அது ஒரு தக்க பாடமாக அமையும்” என்று கூறினார்.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் கூறுகையில், "ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் ஆகியோரின் மரணங்கள் இந்தியாவின் காவல் துறை பொறுப்புணர்வின் தோல்வியாகவே பார்க்க முடிகிறது. இது முதல் நிகழ்வல்ல" என்று குறிப்பிட்டுப் பேசினார்.

நேர்மையுடன் சாட்சியமளித்த காவலருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் - திருமாவளவன்

2018 தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் தரவுகளின்படி, லாக்கப் மரணங்களில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவினாஷ் குமார் சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு அரசு அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காவல் துறை செய்யும் இதுபோன்ற சித்ரவதைகளை, கண்டும் காணாமல் இருப்பது முறையானதல்ல. அவர்களே முன் வந்து குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனைகள் பெற்றுத்தர உத்தரவாதம் எடுக்க வேண்டும்.

மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக சர்வதேசச் சட்டத்தில் சித்திரவதை சட்டவிரோதமானது என்றாலும், அவை இந்திய சட்டத்தின் கீழ், தனித்துவமான குற்றங்களாக இன்னும் அங்கீகரிக்கப்படாமலேயே இருப்பதாக அவினாஷ் குமார் தெரிவித்தார்.

சாத்தான்குளம் விவகாரம்- கதறி அழுது வீடியோ வெளியிட்ட ஜனனி அசோக் குமார்!

சித்ரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான அணுகுமுறைக்கு எதிரான ஐ.நா. மாநாட்டில் இந்தியா 1997ஆம் ஆண்டு கையெழுத்திட்டது. ஆனால், அதனை அங்கீகரிக்க உதவும் உள்நாட்டுச் சட்டத்தை இன்னும் இந்தியா நிறைவேற்றவில்லை என்று அவினாஷ் குமார் தெரிவித்தார்.

சித்ரவதை தடுப்பு மசோதா மக்களவையால் 2010ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.