டெல்லி வடகிழக்குப் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம், கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் சிக்கி தற்போதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, டெல்லி ஜாஃபராபாத், மௌஜ்பூர், பாராபூர், கோகல்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தச்சூழலில் டெல்லி கலவரம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், "டெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பொதுச் செயலாளரை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. கலவரத்தை மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'வன்முறையை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்'