ETV Bharat / international

கலிபோர்னியா சான் ஜோஸ் தேவாலயத்தில் கத்திக்குத்து: இருவர் உயிரிழப்பு,பலர் காயம்!

author img

By

Published : Nov 23, 2020, 2:47 PM IST

கலிபோர்னியா: சான் ஜோஸ் தேவாலயத்தில் இரண்டு பேரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tat
t

கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமான சான் ஜோஸ் தேவாலயம் உள்ளது. நேற்று மாலை தேவாலயத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இருவரை குத்திக்கொலை செய்துள்ளார். மேலும், பலரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்து விரைந்தவந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், தேவாலயத்தில் எந்தவிதமான நிகழ்வுக்காக மக்கள் ஒன்றுகூடவில்லை. ஆனால், சில வீடற்ற மக்கள் குளிரை தாங்கிக்கொள்ள முடியாமல் தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதில், இரண்டு நபர்களே கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தத் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியாகவில்லை. இவ்விவகாரத்தில் தொடர்புள்ளதாக 22 வயதான இளைஞரை சந்தேகத்தின்பேரில் காவல் துறை கைதுசெய்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.