ETV Bharat / international

'தலிபான், ரஷ்யா இடையே ரகசிய ஒப்பந்தம்'- பரபரப்பை கிளப்பிய அமெரிக்க பத்திரிகை!

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், ரஷ்யாவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருந்ததாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

Trump reaction to reports of conspiracy Taliban Russian Embassy Mark Meadows தலிபான், ரஷ்யா இடையே ரகசிய ஒப்பந்தம் நியூயார்க் டைம்ஸ் டொனால்ட் ட்ரம்ப்

author img

By

Published : Jun 29, 2020, 2:31 PM IST

அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான, “தி நியூயார்க் டைம்ஸ்” நாளிதழ் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்த செய்தியில், “ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், தலிபான்களுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளது” என குற்றஞ்சாட்டி அறிக்கை ஒன்று ட்ரம்புக்கு அளிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்திருந்தது.

இந்தச் செய்தி அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒருபோதும் விளக்கம் அளிக்கப்படவில்லை என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை மறுத்துள்ளார்.

துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் தலைமைத் தளபதி மார்க் மெடோஸ் ஆகியோருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் அந்த நாளேடு போலி செய்திகளை பரப்பியுள்ளது என்றும் ட்ரம்ப் கூறினார்.

இதேபோல் அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகமும் நியூயார்க் டைம்ஸின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும், செய்தித்தாளின் குற்றச்சாட்டுகளையும் தலிபான்கள் மறுத்துள்ளனர், அவை ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதைத் தடுக்கும் முயற்சி என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியினர் விவாதப் பொருளாக ஆக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: கல்வான் மோதல்: தற்காப்புக் கலை வீரர்களை சீனா அனுப்பியது உண்மை தான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.