கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளியூட்டப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று இரவு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் வெள்ளை மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளியூட்டினர்.
சுமார் 30 அடி உயரம் கொண்ட இந்த பிரமாண்ட கொலராடோ ஸ்புரூஸ் மரத்தைச் சுற்றி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட 50 ஆயிரம் விளங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர, 450 வெள்ளை நிற நட்சத்திரங்களும் தொங்கவிடப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரம் ஒளியூட்டப்படும் நிகழ்ச்சி கடந்த 97 வருடங்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராகிறார் சஜித் பிரேமதாச!