ETV Bharat / international

'கரோனாவால் 60,000 அமெரிக்கர்களே உயிரிழப்பர், அதனால் எனக்கே வாக்களியுங்கள்!' - ட்ரம்பின் வாக்கு வேட்டை! - ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பு

வாஷிங்டன்: கோவிட்-19 பரவலை அமெரிக்கா சிறப்பாகக் கையாண்டதாலேயே உயிரிழப்புகள் 60,000ஆகக் குறைந்துள்ளதாகவும் இதனால் தனக்கே மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

Trump
Trump
author img

By

Published : Apr 28, 2020, 10:29 AM IST

கடந்தாண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று அந்நாட்டில் கட்டுக்குள் வந்துவிட்டது. இருப்பினும் உலக வல்லரசு நாடான அமெரிக்கா இந்த தீநுண்மி தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்துவரும் நடவடிக்கைகள் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் வியட்நாம் போரில் அமெரிக்க இழந்த வீரர்களைவிட கடந்த ஆறு வாரத்தில் கோவிட்-19 தொற்றால் அதிக அமெரிக்கர்களை இழந்துள்ளோம், எனவே நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபராக நீங்கள் தகுதியானவரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

வியட்நாம் போரில் சுமார் 58 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆறு வாரங்களில் கோவிட்-19 தொற்றால் மட்டும் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், "கோவிட்-19 தொற்றால் அமெரிக்காவில் சுமார் 22 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது உயிரிழப்புகள் 60 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் வரை இருக்கும் என்றே கருதுகிறேன்.

இதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. தனி ஒரு ஆளுக்கு இந்தப் பிரச்னைகள் மிகவும் அதிகம் என்றுதான் நான் கூறுவேன். இருந்தாலும் நாங்கள் பல நல்ல முடிவுகளை எடுத்தோம். நாட்டின் எல்லைகளை மூடுவதும் சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு விதித்த தடையும் நாங்கள் எடுத்த மிக முக்கிய முடிவு.

சிறப்பாகப் பணியாற்றியுள்ளோம் என்றே நான் கருதுகிறேன். தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்தி உயிரிழப்புகளைக் குறைத்துள்ளோம். எனவே மீண்டும் அமெரிக்க அதிபராக நான் முற்றிலும் தகுதியானவன்" என்றார்.

அமெரிக்காவில் 10 லட்சத்து 10 ஆயிரத்து 356 பேருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 56 ஆயிரத்து 797 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: தளர்த்தப்படும் ஊரடங்கு - தரவுகள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.