ETV Bharat / international

"நாங்கள் வர்த்தகத்திற்குத் தயார், விற்பனைக்கு அல்ல" - ட்ரம்ப்க்கு டென்மார்க் பதிலடி!

கோபன்ஹேகன்: கிரீன்லேண்ட் தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க எண்ணிய அதிபர் டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாங்கள் வர்த்தகத்திற்குத் தயார், விற்பனைக்கு அல்ல!
author img

By

Published : Aug 18, 2019, 7:40 PM IST

உலகின் மிகப்பெரிய தீவு என்ற பெருமையை கொண்டது கிரீன்லேண்ட் தீவு. இருப்பினும், இங்கு 60,000-க்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். அமெரிக்காவுக்கு அருகே இருந்தாலும், இத்தீவு ஐரோப்பாவில் இருக்கும் டென்மார்க் அரசிற்கு உட்பட்டு, தன்னாட்சி அதிகாரம் கொண்டு செயல்படுகிறது.

கிரீன்லேண்டை இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த பின்பு, 1946ஆம் ஆண்டின் போது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ் ட்ரூமன் 100 மில்லியன் டாலருக்கு அலாஸ்காவின் சில பகுதிகளைக் கொடுத்துவிட்டு விலைக்கு வாங்க எண்ணினார். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லேண்டை விலைக்கு வாங்கும் எண்ணம் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் 'த வால் ஸ்ட்ரீட்' நாளேடு இந்த வாரம் செய்தி வெளியிட்டது. இதற்கு பதிலளிக்கும் வண்ணமாக, கிரீன்லேண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் 'நாங்கள் வர்த்தகத்திற்குத் தயார், விற்பனைக்கு அல்ல' என்று பதிவிட்டிருக்கிறது.

முன்னதாக கிரீன்லேண்டை விலைக்கு வாங்க டென்மார்க் மற்றும் கிரீன்லேண்ட் மக்களின் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

https://indianexpress.com/article/explained/donald-trump-reportedly-wants-greenland-can-you-really-buy-a-foreign-territory-that-big-5914523/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.