ETV Bharat / international

டெக் நிறுவனங்களுக்கு விரைவில் வருகிறது கட்டுப்பாடு!

டெல்லி: அமெரிக்க அதிபரின் ட்வீட்களை போலிச் செய்தி என்று ட்விட்டர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து டெக் நிறுவனங்கள் மீது பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 28, 2020, 1:12 PM IST

Trump
Trump

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக இத்தேர்தல் முற்றிலும் தபால் மூலம் நடக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தபால் மூலம் நடைபெற்றால், அது எதிர்க்கட்சிக்குச் சாதகமாக முடியும் என்பதால் ஆளும் குடியரசு கட்சியினர், தபால் மூலம் வாக்களிக்கும் முறைக்குத் தொடர்ந்து எதிரான கருத்துகளை வெளிப்படுத்திவருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "தபால் மூலம் வாக்களிக்கும் முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெறும். தபால் வாக்குகள் திருடப்படலாம். ஏன் போலியான தபால் வாக்குகள் அச்சடிக்கப்படலாம்.

கலிபோர்னியா மாகாணத்தில் பல லட்சம் பேர் எவ்வாறு குடியேறினார்கள் என்பது கூட விசாரிக்கப்படாமல் அவர்களுக்குத் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இது ஒரு மோசடியான தேர்தல்!" என்று பதிவிட்டார்.

இந்த ட்வீட்களின் கீழே போலியான ட்வீட்களுக்கு வழங்கப்படும் எச்சரிக்கையை இணைத்த ட்விட்டர், தபால் வாக்குகள் குறித்து உண்மையான தகவல்களைப் அளிக்கும் இணைப்பையும் வழங்கியது. அமெரிக்க வரலாற்றிலேயே அந்நாட்டின் அதிபரின் ட்வீட் தவறான தகவல்களைக் கொண்டுள்ளது என்று ட்விட்டர் எச்சரிக்கை செய்வது இதுவே முதல்முறையாகும்.

ட்விட்டரின் இந்த செயலால் கோபடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குறுக்கீடு செய்ய ட்விட்டர் முயன்றுவருகிறது என்றும் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், "டெக் நிறுவனங்கள் குறித்து நாங்கள் கூறிவருவது சரியானது என்பதையே ட்விட்டரின் இந்த நடவடிக்கை காட்டுகிறது. விரைவில் மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கடுமையாக எச்சரிக்கும் தொனியில் பதிவிட்டுள்ளார்.

  • Twitter has now shown that everything we have been saying about them (and their other compatriots) is correct. Big action to follow!

    — Donald J. Trump (@realDonaldTrump) May 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அமெரிக்கச் சட்டத்தின்படி, பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வெளியிடும் ஒரு தளமாக/கருவியாகவே ட்விட்டர் கருதப்படுகிறது. இதனால் ட்விட்டர் போன்ற டெக் நிறுவனங்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. இதனால் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைக் கருத்துகளை வெளியிடும் வெளியீட்டாளர்களாக(publishers) கருதி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் வலியுறுத்துகின்றனர்.

மேலும் இது குறித்து குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஷ் ஹவ்லி, " அமெரிக்க அரசால் இவர்கள்(டெக் நிறுவனங்கள்) சிறப்புச் சக்தியைப் பெறுகிறார்கள். இதன் மூலம் ஆண்டுதோறும் பில்லியின் டாலர்களை சம்பாதிக்கின்றனர். அந்த பணத்தைக் கொண்டு சீனாவை விமர்சிக்கும் நபர்களை தணிக்கை செய்கின்றனர். இது எந்த வகையில் நியாயம்" என்றார்.

இதையும் படிங்க: இனி ஹாங்காங் தன்னாட்சி பெற்ற மாகாணம் அல்ல - அமெரிக்கா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.