இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கர்கள் யாரும் கவலைப் படவேண்டாம். என்னை பரிசோதனை செய்தனர். அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் ஆலோசனைக்கு முரணாக, நேற்று வெள்ளை மாளிகையில் கொரோனா ரெஸ்பான்ஸ் குழுவினருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கைக்குலுக்கி வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பழக்கம் அவருக்கு நீண்ட காலமாக உள்ளதாகவும், அதனை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளதெனவும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, பிரேசில் அதிபர் பொல்சோனாரோவுடன் ட்ரம்ப்பை சந்தித்த அந்நாட்டு உயர் அலுவலர்களுக்கு கொரோனா இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. இந்தச் செய்தி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
கோவிட்-19 (கொரோனா) வைரஸ் காரணமாக அமெரிக்காவில் இதுவரை இரண்டு ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலின் தீவிரத்தை அறிந்த, அதிபர் ட்ரம்ப் அந்நாட்டில் சுகாதார அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : கொரோனா பீதியில் தலைமறைவான வட கொரியா அதிபர் ?