வரலாறு காணாத பேரிடராக அமெரிக்காவில் கரோனா பாதிப்பு உருவெடுத்துள்ளது. இதுவரை அந்நாட்டில் 6.44 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 28 ஆயிரத்து 580 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அந்நாட்டின் பொருளாதாரத்தையும் கரோனா வெகுவாக புரட்டிப் போட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பானது அந்நாட்டின் முன்னணி நகரமான நியூயார்க்கை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. அந்நகரில் மட்டும் கரோனாவால் 2.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 11 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக நாள்தோறும் லட்சக்கணக்கான பரிசோதணை மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.
இதுகுறித்து அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது செய்தியாளர் சந்திப்பில், கரோனா என்ற கண்டத்தை அமெரிக்கா வேகமாக கடந்துவருவதாகவும், விரைவில் நாட்டில் விதிக்கப்பட்டுள்ளக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா நிவாரணப் பொருட்களில் என் பெயர் இருக்கணும் - ட்ரம்ப் உத்தர
வு