ETV Bharat / international

ட்ரம்ப் குறித்து கேள்வி : 21 நொடிகள் மௌனம் காத்த கனடா பிரதமர்! - ட்ரம்ப் அமெரிக்க போராட்டம்

ஒடாவா: நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டத்தை அதிபர் ட்ரம்ப் கையாள்வது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 21 நொடிகள் பதிலளிக்காமல் மௌனமாக இருந்துள்ளார்.

justin trudeau
justin trudeau
author img

By

Published : Jun 3, 2020, 5:18 PM IST

அமெரிக்காவின் மினியோபோலிஸ் நகரில் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், காவல் துறையினர் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் மறைவுக்கு நீதி கோரியும், நிறவெறிக்கு எதிராக முழக்கம் எழுப்பியும் அமெரிக்கா முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் சில நாள்களுக்கு முன்பு வன்முறையாக வெடித்தது. வன்முறையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டும், அதனைப் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

அதிபர் ட்ரம்ப்பின் அழுத்தம் காரணமாக, போராட்டக்காரர்கள் மீது அமெரிக்க காவல் துறையினர் தடியடி நடத்துவது, கண்ணீர் புகைக் குண்டு வீசுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கரோனா தொற்று பரவலுக்கு நடுவே வெடித்துள்ள இந்தப் போராட்டம் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.

இந்நிலையில், கரோனா நிலவரம் குறித்து அறிவிப்பு வெளியிட கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அமெரிக்காவில் நடைபெறும் போராட்டத்தில் கண்ணீர் புகைக் குண்டு வீசுவது குறித்தும், போராட்டத்தை அமெரிக்க அதிபர் கையாள்வது குறித்தும் செய்தியாளர்கள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

அவற்றுக்குப் பதிலளிக்காமல் 21 நொடிகள் மௌனமாக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, ட்ரம்ப்பின் பெயரைக் குறிப்பிடாமல் அமெரிக்காவின் கொடூரமான போராட்டம் கனட மக்களைக் கவலையடையச் செய்துள்ளது என சூசகமாகப் பதிலளித்தார்.

ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பு

பொதுவாக செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கும் ட்ரூடோ இவ்வாறு வாயடைத்துப் போனது செய்தியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கனடாவின் 70 விழுக்காடு ஏற்றுமதி அமெரிக்காவில் நடப்பதால், அதனைக் கருத்தில்கொண்டு ட்ரம்ப் குறித்து வெளிப்படையாக விமர்சிப்பதை ஜஸ்டின் ட்ரூடோ தவிர்த்துவருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதுகுறித்து அறிவியல் அறிஞர் நெல்சன் வைஸ்மேனிடம் கேட்டபோது, "இந்த விவகாரம் தொடர்பாக அவர் எந்தக் கேள்வியையும் எதிர்பார்க்கவில்லை. அதுகுறித்து என்ன பதில் சொல்வது என்று குழப்பமடைந்திருக்காலம். அதனால்தான் ட்ரம்ப்பின் விமர்சிக்காத வகையில், இந்தப் பதிலை அவர் அளித்திருப்பார்"என்றார்.

இதையும் படிங்க : நிசார்கா புயல் எதிரொலி: 15 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.