ETV Bharat / international

கோவிட் பாதிப்புக்குப்பின் முதல்முறையாக பொதுநிகழ்வில் தோன்றிய ட்ரம்ப் - அமெரிக்க தேர்தல் செய்திகள்

கரோனா பாதிப்புக்குப்பின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பொது நிகழ்வில் அதிபர் ட்ரம்ப் முதல்முறையாக தோன்றி உரையாற்றினார்.

Trump
Trump
author img

By

Published : Oct 11, 2020, 7:57 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் இருவருக்கும் கடந்த இரண்டாம் தேதி (அக்டோபர் 2) கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வால்ட்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ட்ரம்ப் உடல் நலம் தேறி தற்போது வீடு திரும்பியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மூன்று வார காலத்திற்கும் குறைவான அவகாசமே உள்ள நிலையில், நேற்று அக்.10 தனது வெள்ளை மாளிகையில் உள்ள பால்கனியிலிருந்து மக்களிடையே உரையாற்றினார் ட்ரம்ப். கோவிட்-19 பாதிப்புக்குப் பின், அதிபர் ட்ரம்ப் பங்கேற்ற முதல் பொதுவெளி நிகழ்வு இதுவாகும்.

மக்களிடையே உரையாற்றிய ட்ரம்ப்

அப்போது, தனக்கு சிகிச்சை அளித்து விரைவில் குணமடையச் செய்த மருத்துவர்களுக்கும் தன் மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி எனக் கூறினார். மேலும், கோவிட்-19 பாதிப்பு அமெரிக்காவில் மெல்ல மறையத் தொடங்கியதாகக் கூறிய ட்ரம்ப், அமெரிக்கா மிக முக்கியமானத் தேர்தலை சந்திக்கவுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் மக்கள் அனைவரும் நாட்டின் நலன் கருதி தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதிபர் ட்ரம்ப் கோவிட்-19 பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டாரா என்பது குறித்து வெள்ளி மாளிகை விளக்கம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவிட்-19 இரண்டாம் அலை: தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்துவரும் ஐரோப்பா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.