அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தாக்குதல் அதிவேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் தேசிய சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின் முழு அதிகாரமும் பயன்படுத்தும் வகையில், கொரோனா வைரஸூக்கு எதிரான சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்தும் விதமாக, 50 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில் தற்போது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 1,740 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக வாஷிங்டன், கலிபோர்னியாவில் உள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்தில் முதலில் அறியப்பட்ட கொரோனா அறிகுறி, உலக நாடுகளுக்கும் விஷம் போல் பரவியது. இந்தப் பாதிப்புக்கு உலகம் முழுக்க ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'இப்ப எப்படி எனக்கு கொரோனா வரும்' - பெரிய அட்டையை சுற்றிக்கொண்ட நபர்!