ETV Bharat / international

மெக்ஸிகோ எல்லையை பார்வையிட வந்த ட்ரம்புக்கு எதிராக போராட்டம் - பேபி டிரம்ப்

வாஷிங்டன்: கலிஃபோர்னியா மாகணத்தில் எழுப்பப்பட்டு வரும் மெக்ஸிகோ எல்லைச் சுவரை பார்வையிட வந்த அந்நாட்டு அதிபர் ட்ரம்புக்கு எதிராக அந்நகர மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டிரம்ப்புக்கு எதிராக போராட்டம்
author img

By

Published : Apr 7, 2019, 7:39 AM IST

அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவசரநிலையைப் பிப்ரவரி மாதம் பிரகடனப்படுத்தினார். தற்போது, அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றதுவருகின்றன.

இந்நிலையில், கலிஃபோர்னியா மாகாணத்தில் மெக்ஸிகோ எல்லை அருகே உள்ள கலெக்ஸிக்கோ (Calexico) நகரில் நடைபெற்றுவரும் எல்லை சுவர் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக அதிபர் ட்ரம்ப் நேற்று அங்குச் சென்றிருந்தார்.

அதிபர் டொனால்டு டிரம்ப் டிவீட்
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்வீட்

அவரின் வருகையையொட்டி அந்நகர மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். டிரம்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அணி அணியாய் வீதியில் திரண்ட மக்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும், அவரைக் கேலி செய்யும் வகையில் குழந்தை வடிவத்திலான ட்ரம்ப் உருவத்தில் ராட்சத பலூன் ஒன்றை பறக்கவிட்டனர்.

கலெக்ஸிக்கோ
கலெக்ஸிக்கோ

இது குறித்து போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், தன் அரசு கொண்டுவரும் கொள்கைகள் குறித்து அவருக்கே தெரியாது. ஏழு வயது குழந்தையைப் போல் செயல்படுகிறார். இதனை உணர்த்தும் வகையில் இந்த பலூனை பறக்கவிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

போராட்டம் நடக்கும் இடத்தில் ட்ரம்பின் ஆதரவாளர்களும் வந்திருந்தனர். இதில், மெக்ஸிகோ நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ குடியரிமை வாங்கிய ஆயூரியா பெரி ( Aurrea Berry) பேசுகையில், "அமெரிக்காவில் குடியுரிமை பெறவேண்டும் என்றால் அனைவரையும் போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். நானும் அவ்வழியில் வந்தவள் தான்" எனத் தெரிவித்தார்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் என டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.