பாகிஸ்தான் நாட்டுடனான ஒத்துழைப்பை அதன் ராணுவத் திறனை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டுக்கு மீண்டும் ராணுவக் கல்வி, பயிற்சி அளிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமைப்பு பகிர்ந்துள்ள ட்வீட்டில், "பாகிஸ்தான் நாட்டுடனான ராணுவ ஒத்துழைப்பையும், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானுக்கு சர்வேத ராணுவக் கல்வி, பயற்சி அளிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் நிதியுதவி பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : "வெளியேறக் கூடாது"- பாகிஸ்தான் அமெரிக்கத் தூதரக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்