அமெரிக்க அதிபராக ஒபாமா பதவிவகித்த காலத்தில், அந்நாட்டின் மூன்றாம் பாலினத்தவர்கள் முறையான சுகாதாரச் சேவைகளைப் பெற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். LGBTQ எனப்படும் மூன்றாம் பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களின் தனிநபர் உரிமையை அங்கீகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை ஒபாமா அரசு மேற்கொண்டது.
இந்தச் சீர்திருத்தங்களில் மாற்றம் கொண்டுவந்து புதிய உத்தரவை தற்போதைய ட்ரம்ப் அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மூன்றாம் பாலினத்தவர் இதுவரை பெற்றுவந்த சுகாதார உரிமைகளை மீண்டும் பறித்து பழைய நிலைக்குக் கொண்டுசெல்லும் விதமாக உள்ளது.
அதிபர் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி பழமைவாத போக்கைக் கடைப்பிடிக்கும் பின்புலத்தைக் கொண்டதாகும். அதிபர் ஒபாமா நவீனத்துவத்தைப் பின்பற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் மேற்கண்ட சீர்திருத்த நடவவடிக்கையை தற்போதைய ட்ரம்ப் அரசு மாற்றியுள்ளதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: 'இது ரொம்ப தவறான செயல்' - அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா