சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. உலக நாடுகள் சுகாதார அவசர நிலையாக இதை எதிர்கொள்ளும் நிலையில், தற்போது கனடா நாட்டையும் அது விட்டுவைக்கவில்லை.
கனாடாவில் இதுவரை 200 பேர் நோய் பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு நாடாளுமன்றம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயருக்கு தற்போது கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், கனடா நாட்டு பிரதமரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்பட்டுவருகிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், என்னை நான் தனிமைப்படுத்தியுள்ளேன். எனக்கு நோய் பாதிப்பு அறிகுறிகள் தற்போதுவரை எதுவும் இல்லை.
தொழில்நுட்ப வசதி மேம்பட்ட இந்த காலகட்டத்தில் வீட்டிலிருந்தே அரசு பணிகளை செய்துவருகிறேன் எனத் தெரிவித்துள்ளார். கனடா நாட்டு பிரதமர், நோய் தடுப்பு நடவடிக்கையின் முன்னுதாரணமாக வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) என்ற அடிப்படையில் வீட்டிலிருந்தே அரசு பணிகளை செய்துவருவது பலரின் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: இனிமை நிறைந்த உலகம் இருக்கு கொரோனா பற்றி கவலை எதற்கு...