ETV Bharat / international

கரோனா காலத்தில் போலி மின்னஞ்சல் உலாவுகிறது...! ஐ.நா. எச்சரிக்கை - 90 நாடுகள் சைபர் பாதுகாப்பு

நியூயார்க்: கரோனா லாக்டவுன் காலத்தில் இணையத்தில் போலி மின்னஞ்சல் உலவும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

malicious email
malicious email
author img

By

Published : May 24, 2020, 3:05 PM IST

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கரோனா இணைய பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சைபர் குற்றம் குறித்த விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி, உலகில் பெரும்பாலான நாடுகள் இன்னும் இணைய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

குறிப்பாக, 90 நாடுகள் சைபர் பாதுகாப்பு விவகாரத்தில் முதல்கட்ட பணிகளைக் கூட தாண்டவில்லை. தற்போது சர்வதேச சமூகம் கரோனா பெருந்தொற்றால் சிக்கித் தவித்துவரும் சூழலில், போலி மின்னஞ்சல் மூலம் நிகழும் குற்றங்கள் தற்போது 600 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், இதுபோன்ற அசாதாரணச் சூழலில் இணைய திருடர்கள், பயங்கரவாதிகள், உளவாளிகள் ஆகியோர் பலே திட்டங்களைத் தீட்டி தகவல் திருட்டு உள்ளிட்ட அத்தூமீறலில் ஈடுபடக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. சர்வதேச நாடுகள் சைபர் பாதுகாப்புக்காக பிரத்யேக கவனத்தை செலுத்த வேண்டிய காலகட்டம் இது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இலங்கையில் முடிவுக்கு வரும் ஊரடங்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.