தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இதில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலில் லண்டன் சென்று தொழில் முதலீடுகளுக்காக அழைப்பு விடுத்த அவர் தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவில் வரும் 7ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், நேற்று நியூயார்க் நகரில் உள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் இரண்டாயிரத்து 780 கோடியில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதில் 16 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.