அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. சுமார் நான்கு லட்சத்திற்கு அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் கரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஹேர்கட் செய்ய முடியாமல் தூக்கத்தை இழந்துகொண்டிருக்கும் மக்களுக்காக முடி திருத்தும் கடைகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் கூறுகையில், "அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகள், தோல் பதனிடுதல் நிலையங்கள் ஆகியவற்றை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதியளித்துள்ளார். முடி திருத்தும் கடையில் ஒரே நேரத்தில் ஒரு வாடிக்கையாளர் மட்டுமே இருக்க வேண்டும். காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆறு அடி இடைவெளியில் இருக்க வேண்டும் அல்லது வெளியே காத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளரும், ஒப்பனையாளரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் திருமணங்கள், இறுதி சடங்குகள் ஆகியவற்றிலும் மக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும். 65 வயதுக்கும் மேற்பட்ட மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் மகளுக்கு கரோனா?