ETV Bharat / international

'அதிருப்தி அளிக்கிறது' - ட்ரம்ப்பின் விசா கட்டுப்பாடுகள் குறித்து சுந்தர் பிச்சை - விசா கட்டுப்பாடுகள் குறித்து சுந்தர் பிச்சை

வாஷிங்டன் : ஹெச் - 1பி விசா உட்பட பல்வேறு வகையான விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது அதிருப்தி அளிப்பதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Sunder Pichai
Sunder Pichai
author img

By

Published : Jun 23, 2020, 3:57 PM IST

Updated : Jun 23, 2020, 8:11 PM IST

கோவிட்-19 தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு நாடாக அமெரிக்கா இருக்கிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா பாதிப்புகள் குறைந்து, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும்போது, அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகள் முதலில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஹெச் - 1பி, ஹெச் - 2பி, எல் மற்றும் ஜே பிரிவு விசாக்கள் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றும் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள், குறிப்பாக இந்தியர்கள், ஹெச்-1பி விசாவிலேயே அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் அரசின் இந்த உத்தரவு டெக் நிறுவனங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை அதிருப்தி அளிப்பதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

  • Immigration has contributed immensely to America’s economic success, making it a global leader in tech, and also Google the company it is today. Disappointed by today’s proclamation - we’ll continue to stand with immigrants and work to expand opportunity for all.

    — Sundar Pichai (@sundarpichai) June 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்க பொருளாதாரம் உலக அளவில் சிறப்பான இடத்தை அடைந்ததற்கும், தொழில்நுட்பத்தில் தலைமை இடத்தில் இருப்பதற்கும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் பங்கு அளர்ப்பரியது. கூகுள் இன்று இந்த இடத்தில் இருப்பதற்கும் அவர்களின் பங்கு முக்கியமானது.

அமெரிக்கா அரசின் இன்றைய அறிவிப்பு எனக்கு அதிருப்தி அளிக்கிறது. வெளி நாடுகளிலிருந்து வரும் ஊழியர்களுக்கான எங்கள் ஆதரவு தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து சிவில் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தலைமைத்துவ மாநாட்டின் (The Leadership Conference on Civil and Human Rights) தலைவர் வனிதா குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு இனவெறியின் புதிய வடிவமே தவிர வேறொன்றும் இல்லை. ஆனால், இது கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த தவறிய ட்ரம்பை காப்பாற்றவல்லது.

உண்மையில், புலம்பெயர்ந்தோரை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை நீதிமன்றங்கள் நிறுத்தி விடும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தகுதியின் அடிப்படையில் ஹெச்1-பி விசா வழங்குங்கள்: ட்ரம்ப் உத்தரவு

Last Updated : Jun 23, 2020, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.