ETV Bharat / international

திடீர் புயலால் வானிலையில் மாற்றம்... தள்ளிப்போகிறதா ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவுதல்? - SpaceX's 1st astronaut launch delayed

வாஷிங்டன்: ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவதல் வானிலை மாற்றத்தால் தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்படாலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பேஸ்-எக்ஸ்
ஸ்பேஸ்-எக்ஸ்
author img

By

Published : May 26, 2020, 11:06 PM IST

ஸ்பேஸ்-எக்ஸ் என்ற தனியார் அமெரிக்க விண்வெளி மையம் சார்பாக, கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நாளை (மே 27) மாலை 4.33 மணிக்கு, விண்வெளிக்கு இரண்டு வீரர்களை ராக்கெட்டில் அனுப்பவுள்ளனர். இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நடக்கவுள்ளதால் மக்கள் மத்தியிலும், ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், நாசாவின் கமர்ஷியல் குழு திட்டத்தின் மேலாளர் கேத்தி லூடெர்ஸ் கூறுகையில், "ராக்கெட் ஏவுதலுக்கு உண்டான அனைத்து பணிகளும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தற்போது, எங்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே சவால் வானிலையை கட்டுப்படுத்துவதைக் கண்டுபிடிப்பதுதான். இரண்டு நாள்களாக பெய்த மழை தற்போது குறைந்துள்ளது. நாங்கள் தொடர்ந்து விழிப்புடனும், கவனமாகவும் இருக்கிறோம். வானிலை மாற்றத்தினை பொருத்து ராக்கெட் ஏவுதல் முடிவு செய்யப்படும்" என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய ஸ்பேஸ்எக்ஸின் துணைத் தலைவர் ஹான்ஸ் கோனிக்ஸ்மேன், "ராக்கெட் கட்டுப்பாட்டுக் குழு, வானிலை மாற்றத்தினை பல மாதிரிகள் மூலம் ஆராய்ந்து, ராக்கெட் செலுத்துவது பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்துவார்கள். வானிலை ஒத்துழைத்தால், நாளை மாலை திட்டமிட்டபடி 4:33 மணிக்கு ஏவுதல் நடைபெறும். ஏவதலில் சிக்கல் ஏற்பட்டால் சனிக்கிழமையன்று அடுத்த முயற்சியில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஆலோசனை கூறும் இந்தியர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.