சாதாரண புகைப்படங்களும் சில நேரங்களில் மறக்கமுடியாத புகைப்படங்களாக மாறுவது உண்டு. அதேபோல், மனிதர்கள் இல்லாத ரயில் நிலையத்தில் எலிகளைப் புகைப்படம் எடுத்ததன் மூலம் உலகளவில் பிரபலம் அடைந்துள்ளார் லண்டன் புகைப்படக் கலைஞர்.
சாம் ரவுலி என்ற புகைப்பட கலைஞர், லண்டனில் உள்ள பாதாள ரயில் நிலையத்தில் தற்செயலாக இரண்டு எலிக்குட்டிகள் சண்டையிடும் காட்சியை பார்த்துள்ளார். மேலும், அதை தனது கேமராவில் புகைப்படம் எடுத்து "Station Squabble" என்ற தலைப்பில் வெளியிட்டார்.
இப்புகைப்படம் சிறந்த வனவிலங்கு புகைப்படங்கள் 2019 போட்டியில் வெற்றியடையவில்லை. இருப்பினும் மக்களின் மனதை வென்று சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியுள்ளது. மேலும், தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படத்தில் இவரின் 'Station Squabble' புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக தயார் செய்யப்பட்ட மைதானம் திறப்பு!