ETV Bharat / international

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடைந்த நாசா வீரர்கள்! - SpaceX's historic encore: Astronauts arrive at space station

வாஷிங்டன்: நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு பேருடன் விண்வெளிக்குச் சென்ற ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடைந்தது.

spacexs-historic-encore-astronauts-arrive-at-space-station
நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடைந்தனர்!
author img

By

Published : Jun 1, 2020, 11:21 AM IST

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி போக்குவரத்து தனியார் சேவை நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். இந்நிறுவனம் உருவாக்கிய 'க்ரூ டிராகன் கேப்சியூல்' என்ற ராக்கெட் மூலம் நேற்று (மே 31) நாசாவின் மூத்த வெண்வெளி ஆராய்ச்சி வீரர்களான பாப் பெஹன்கென், டக் ஹர்லி ஆகியோர் விண்வெளிக்கு வெற்றிகரமாகச் சென்றனர்.

spacexs-historic-encore-astronauts-arrive-at-space-station
விண்ணில் பாய்ந்த ராக்கெட்

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக க்ரூ டிராகன் ராக்கெட் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தோடு எவ்வித உதவிகளும் இன்றி, தானாக தன்னை இணைத்துக் கொண்டது.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தரையிறங்கிய பெஹன்கென், ஹர்லி ஆகியோரை, அங்குள்ள நாசா வீரரான கிரிஸ் கெஸ்சடி என்பவர், அழைப்பு மணியை அடித்து, அவர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தார்.

மறுபுறம் நாசாவில் இருந்து அவர்களின் பாராட்டுகளை (ப்ராவோ) அங்கிருந்த விண்வெளி வீரர்களுக்கு அனுப்பியிருந்தனர்.

இது அமெரிக்காவின் விண்வெளி சாதனையில் ஒரு புதிய பெரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடைந்தனர்!

தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இரண்டு விண்வெளி வீரர்களை விண்ணிற்கு அனுப்பிய, இந்தச் சாதனை உலகளவில் பேசப்படும். ஏனென்றால், ஒரு தனியார் விண்வெளிப் போக்குவரத்து மையத்தில் இருந்து இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக மக்கள் முடங்கியிருக்கும் நிலையில், அதனையும் தாண்டி அமெரிக்காவும் ஸ்பேஸ் எக்ஸும் யாரும் எதிர்பாராத சாதனையைப் புரிந்து வரலாற்றில் அவர்களுக்கென மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: விண்வெளியில் தனியார் பங்களிப்பு; பலன் குறித்து ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் பிரத்யேக பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.