'ஸ்பேஸ்-எக்ஸ்' தனியார் அமெரிக்க விண்வெளி மையம் சார்பாக, கென்னடி விண்வெளி மையத்திலிருந்து மே 27ஆம் தேதி, விண்வெளிக்கு இரண்டு வீரர்களை ராக்கெட்டில் அனுப்பவுள்ளனர். இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நடக்கப்படவுள்ளதால் மக்கள் மத்தியிலும், பல ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் டக் ஹர்லி, பாப் பெஹன்கென் ஆகிய இரண்டு வீரர்களுக்கும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஹிப் ஸ்பேஸ்சூட்கள் (hip spacesuits), குல்-விங் டெஸ்லாஸ் (gull-wing Teslas) , ஸீலிக் ராக்கெட்ஷிப் (sleek rocketship) வழங்கப்பட்டுள்ளது. இவைகளின் நிறங்கள் கறுப்பு, வெள்ளை நிறங்களின் கலவையாக உள்ளது. இந்த வண்ண ஒருங்கிணைப்பு என்பது ஸ்பேஸ்-எக்ஸ்,டெஸ்லா ஆகிய இரண்டு நிறுவனங்களின் பின்னால் உந்து சக்தியாக செயல்பட்ட எலோன் மஸ்க்குக்கு (Elon Musk) நன்றி தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
விண்வெளி நிலையத்தின் லாஞ்ச் பேடிற்கு சென்றடயை, டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் காரில் ஸ்பேஸ்-எக்ஸ் வீரர்கள் பயணிக்கவுள்ளனர். மேலும், விண்வெளி திரைப்படங்களில் காண்பதைப் போலவே, வீரர்களின் உடைகளில் ஆரஞ்ச் நிறம் அதிகளவில் உள்ளன.
அப்பல்லோ 11இன் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோரால் ஜூலை 16, 1969இல் பயன்படுத்தப்பட்ட இரட்டைக் கதவுகள் வழியாகத் தான் ஹர்லியும், பெஹன்கனும் வெளிப்படுவார்கள். விண்வெளிக்கு பறக்கவிருக்கும் வீரர்களின் பயணம் வரலாற்றில் புதிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் மட்டும் தான் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'எப்ப சார் வருவாங்க' - புதிய வீரர்களுக்காக காத்திருக்கும் சர்வதேச விண்வெளி நிலைய வீரர்கள்