ஸ்பேஸ்எக்ஸ், பால்கான் - 9 ராக்கெட் மூலம் நேற்று (13-06-2020) செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. இது ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார் லிங்க் பிராட்பேண்ட் நெட்வொர்க்கில் ஒன்பதாவது தொகுதியாகும்.
![செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06:52_7601171_974_7601171_1592045650976.png)
மூன்று ஸ்கைசாட் எர்த் - இமேஜிங் செயற்கைக்கோள்கள் இந்த பணியில் ரைட்ஷேர் பேலோடுகளாக ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், சுமார் 60 புதிய ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. பிராட்பேண்ட் இணைய டிரான்ஸ்மிட்டர்களின் மெகா - விண்மீன் தொகுப்பில் சேர இந்த செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : விண்ணிலிருந்து உரையாடிய விண்வெளி வீரர்கள்!