அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் என்கிற தனியார் அமெரிக்க விண்வெளி போக்குவரத்து மையம் உள்ளது. இவர்கள் அவ்வப்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தேவையானப் பொருட்களை விண்கலம் மூலம் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய ராக்கெட்ஷிப்பில் இரண்டு வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்குப்பிறகு, அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு வீரர்கள் செல்லவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியுள்ளது. இந்த ராக்கெட்டானது புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, அடுத்த வாரம் செலுத்தப்படவுள்ளது.
இதுவரை அரசின் ஆராய்ச்சி மையமே விண்வெளி வீரர்கள் அனுப்பி வந்த நிலையில், முதன்முறையாக தனியார் நிறுவனம் கால் பதிக்கவுள்ளது. இதில் பயணிக்கப்போகும் ஹர்லி, பெஹன்கென் ஆகிய இரண்டு வீரர்களும் ஏற்கெனவே இரண்டு விண்வெளி திட்டத்தில் பயணித்திருந்தனர்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டே, ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் குழு ராக்கெட் மூலம் தனது சோதனை ஓட்டத்தை நடத்தியது. ஆனால், விண்வெளியிலிருந்து திரும்பிய போது காப்ஸ்யூல்கேப் கனாவெரலில் பகுதியில் விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டமானது, கால தாமதம் ஆகியுள்ளது. இதுவரை விண்வெளிக்கு ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டும் தான் வீரர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலநிலை மாற்றத்துக்கும் கரோனா பரவலுக்கும் சம்பந்தம் இல்லை!