ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் என்பது தனியாருக்குச் சொந்தமான அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையம். எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம் வணிக ரீதியாகவும், தங்களின் சொந்த செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது. இந்நிலையில், புளோரிடாவில் ப்ரெவார்ட் கவுண்டி பகுதியில் உள்ள, விண்வெளி தளத்தில் பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டில் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் நெட்வொர்க் ( SpaceX's Starlink broadband network) பயன்பாட்டிற்காக பேலோடில் (payload) சுமார் 60 செயற்கைக்கோளை தன்னகத்தே கொண்டுள்ளது. பால்கன் 9 ராக்கெட் முதல் கட்டத்தை வெற்றிகரமாகத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'வரும் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 0.8% ஆக சரியும்'