அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக வர்த்தகப் போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வர்த்தகப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இருநாடுகளும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், "ஒப்பந்தத்தை எங்கு வைத்து கையெழுத்திடுவது என்பது குறித்து ஆலோசித்துவருகிறோம். ஐயோவா மாகாணத்தில் இது நடைபெறலாம். ஏனெனில், இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அங்குள்ள விவசாயிகளுக்கு பெருமளவில் உதவியாக இருக்கும். ஆனால் அதற்கு முன்பு ஒப்பந்தம் முழுமையாக நிறைவடைய வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, தென் அமெரிக்கா நாடான சிலேவில் இந்த நிகழ்வு நடந்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில பிரச்னைகளைச் சுட்டுக்காட்டி அந்த திட்டத்தை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க : 27 ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சியில் சீனா