சீன பெரு நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யவும், அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து நிதித் திரட்டவும் தடை விதிக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை அமெரிக்க மேலவையான செனட் சபையில் லூசியானவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ஜான் கென்னடி முன்மொழிந்துள்ளார். வெளிநாட்டு நிறுவனங்கள் எனக் குறிப்பிட்டாலும் சீன நிறுவனங்களை மறைமுகமாக குறிவைத்தே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்க பங்குச்சந்தையில் முறைகேடுகள் மேற்கொள்வதை தடுக்க வேண்டும், இதுபோன்ற வெளிநாட்டு அச்சுறுத்தல்களை நாம் உடனடியாகக் களைய வேண்டும் என ஜான் கென்னடி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நிலவிவரும் நிலையில், தற்போது கரோனா தாக்கம் இரு நாடுகளுக்கும் இடையே கடும் பூசலை உருவாக்கியுள்ளது. அதன் பின்னணியாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: வூஹான் நகரில் மீண்டும் கரோனா பரவல்: சீனா அதிர்ச்சி