அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், இரு கட்சிகளும் தங்கள் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிபர் தேர்தல் நெருங்குவதால் இரு வேட்பாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உலகமே தீவிரமாகக் கண்காணித்துவருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் பாஸ்வேர்டு டச்சு நாட்டை சேர்ந்த ஹேக்கர் ஹேக் செய்துள்ளார். வெறும், யூகம் மூலம் ட்ரம்பின் பாஸ்வேர்டு maga2020 என்பதை அவர் கண்டறிந்து ஹேக் செய்துள்ளார்.
ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு two-factor authenticationஐ கொண்டிருக்கவில்லை, இதனால் அவரது ட்விட்டர் கணக்கு மிக எளிதாக ஹேக் செய்யப்பட்டுவிட்டது. ட்ரிம்ப்பின் ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்தவுடன், இது குறித்து அமெரிக்காவின் கணினி அவசர தயார்நிலை குழுவிற்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், டச்சு ஹேக்கரின் கூற்றை நிரூப்பிக்க தேவையான ஆதாரங்களை தங்களால் கண்டறிய முடியவில்லை என்று ட்விட்டர் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டும் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை யூகத்தின் மூலம் இதே டச்சு ஹேக்கர் ஹேக் செய்திருந்தார். அப்போது ட்ரம்ப்பின் பாஸ்வேர்ட் yourefired என்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்க ரகசியங்களை வெளியிட்டவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கிய ரஷ்யா!