சவுதி அரசுக்குச் சொந்தமான அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் ஆலை, எண்ணெய் வயல்கள் மீது கடந்த 14ஆம் தேதி (சனிக்கிழமை) ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதி எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும், ஐக்கிய அரபு அமீரக்தில் உள்ள துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவோம் என கிளர்ச்சியாளர்கள் எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அங்கு அமெரிக்கப் படையினரை நிலைநிறுத்த அதிபர் ட்ரம்ப் உத்தவிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்தான அறிவிப்பை மார்க்ஸ் எஸ்பர் வெளியிடுகையில், "சவுதி, ஐக்கிய அரசு அமீரகத்தில் நிலைநிறுத்தப்படவுள்ள அமெரிக்கப் படையினர் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல்களை தடுக்க உதவுவர். ஈரானுடன் அமெரிக்கா போரிட விரும்பவில்லை " என்றார்.
முன்னதாக, சவுதி எண்ணெய் தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கவும், சவுதி அரேபியாவும் குற்றம்சாட்டின. இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் திட்டவட்டமாக மறுத்விட்டது.