சனி கிரகம் மற்றும் அதனைச் சுற்றிவரும் கோள்கள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் கசீனி என்ற நாசா விண்கலம் அனுப்பிய தரவுகளின் அடிப்படையில், ஒரு ஆண்டிற்கு 11 கிமீ என்ற அளவில் டைட்டன் சனியிடமிருந்து விலகிச்செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, சனி கிரகத்திலிருந்து டைட்டன் 12 லட்சம் கிமீ தொலைவில், அக்கிரகத்தின் வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. இந்த ஆய்வைக் கொண்டு பார்க்கும்போது முற்காலத்தில் டைட்டன் சனி கிரத்துக்கு மிக அருகிலிருந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த ஆய்வின் மூத்த ஆசியர்களுள் ஒருவரான வலேரி லைனே கூறுகையில், "இந்த ஆய்வு சனி கிரகத்தைச் சுற்றியுள்ள வளைய அமைப்பு எப்போது தோன்றியது என்பது குறித்து தெளிவுப்படுத்த உதவும்" என்றார். இந்த ஆய்வு குறித்த தகவல் 'natural astronomy' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியிடமிருந்து சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் 3.8 கிமீ என்ற அளவில் நழுவிச் செல்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உலகளவில் கரோனாவால் சுமார் 73 லட்சம் பேர் பாதிப்பு!