இந்தியா - சீனாவுக்கு இடையே எல்லையில் பூசல் நிலவிவரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை சீனா குவித்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லைப் பகுதிகளான அருணாச்சல பிரதேசம், சிக்கிம், லடாக் ஆகியவை பொதுவாக லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் எனக் குறிப்பிடப்படும். கடந்த சில நாட்களாக எல்லைப் பகுதிகளில் ராணுவத்தை குவித்து தேவையற்ற சலசலப்பை சீனா ஏற்படுத்திவருகிறது.
இது தொடர்பாக இந்திய தரப்பு ராணுவத்தை அதிகரித்து, அசாதாரண நிலையை எதிர்கொள்வது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியா - சீனாவுக்கு இடையே பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகரம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், கரோனா உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவுடன் மோதல் போக்கை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடைபிடித்துவரும் நிலையில் இதுபோன்ற கருத்தை அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் குறைப்பு...!