ETV Bharat / international

சீனாவுக்கு செக் வைக்கும் 'குவாட்' கூட்டணி! - குவாட் நாடுகள்

வாஷிங்டன்: சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், குவாட் கூட்டத்தை நடத்த உறுப்பு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

குவாட்
குவாட்
author img

By

Published : Feb 7, 2021, 7:23 PM IST

கடந்த 2007ஆம் ஆண்டு, ராணுவ உறவை மேம்படுத்தும் வகையில், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில், அதற்கு செக் வைக்கும் வகையில் குவாட் கூட்டத்தை நடத்த உறுப்பு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் குவாட் கூட்டணியை மீண்டும் மீட்டெடுக்க ஆவலுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், "இப்பிராந்தியத்தில் குவாட் கூட்டணியின் அடித்தளத்தில்தான் அமெரிக்காவின் கொள்கையை கட்டமைக்கப்படவுள்ளது" என்றார்.

குவாட் உறுப்பு நாடுகளின் சந்திப்பை ஆன்லைனில் நடத்த அமெரிக்க மற்ற நாடுகளுடன் பேசிவருவதாகக் கூறப்படுகிறது. இந்தோ - பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு கவலை அளிக்கும் விதமாக உள்ள நிலையில், சுதந்திரமான பிராந்தியத்தை கட்டமைப்பது குறித்து குவாட் கூட்டணி நாடுகள் ஆலோசிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு, முதல்முறையாக குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. கடந்தாண்டு, பெருந்தொற்றுக்கு மத்தியில் மற்றொரு கூட்டம் நடத்தப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.