ETV Bharat / international

முதல் அமெரிக்க அதிபர் விவாதம்: ட்ரம்ப் - ஜோ பிடன் கடும் வாக்குவாதம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகியோரின் முதல் விவாதமானது, அமெரிக்காவில் கிளீவ்லேண்டில் இந்திய நேரப்படி இன்று ( செப்.30) காலை ஆறு மணியளவில் தொடங்கியது. அனல் பறக்கும் விதமாக 90 நிமிடங்கள் நடந்த இந்த விவாதத்தில், ஃபாக்ஸ் நியூஸின் கிறிஸ் வாலஸ் நடுவராக மத்தியில் இருந்து கேள்வி கேட்க மாறி மாறி வார்த்தைகளால் இருவரும் தங்களைத் தாக்கிக் கொண்டனர்.

டிரம்ப் - ஜோ பிடன் கடும் வாக்குவாதம்
டிரம்ப் - ஜோ பிடன் கடும் வாக்குவாதம்
author img

By

Published : Sep 30, 2020, 12:26 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க கிளீவ்லேண்டில் இந்திய நேரப்படி இன்று ( செப்.30) காலை ஆறு மணியளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகியோரின் முதல் அதிபர் விவாதம் ஃபாக்ஸ் நியூஸின் நடுவர் கிறிஸ் வாலஸ் மத்தியில் கடும் வாக்குவாதத்துடன் 90 நிமிடம் நடந்து முடிந்தது.

இந்த விவாதத்தில் கடுமையாகப் பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் இந்தியாவின் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

புவி வெப்பமயமாதல்:-

இதில் பேசிய ஜோ பிடன், காலநிலை மாற்றத்தை குறிப்பாக புவி வெப்பமயமாதலைத் தடுக்க செய்யப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு அதிகப் பணம் செலவு ஆவதாகச் சொல்லி, ட்ரம்ப் வெளியேறினார். நான் அதிபராக பொறுப்பேற்றால், பாரீஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவேன் எனக் கூறினார்.

இந்தியாவும் கரோனா தொற்றும்:-

கரோனா தொற்றில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து இந்தியா இன்னும் சரியான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என ஃபாக்ஸ் நியூஸின் நடுவர் கிறிஸ் வாலஸிடம், ட்ரம்ப் கூறினார். அதேசமயம், காலநிலை மாற்றம் குறித்த விவாதத்தில் இந்தியாவும் இடம் பெற்றிருந்தது.

வருமான வரியை ஏய்ப்பதில் ட்ரம்ப் கில்லாடி:-

ஜோ பிடன் கூறுகையில்; 'ட்ரம்ப் வெகுகாலமாக தனது வருமான வரி குறித்து இதுவரை தெளிவாக தெரிவிக்கவில்லை. நியூயார்க் டைம்ஸில் இந்த அறிக்கை குறித்து ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்டபோது அதில், பொதுமக்கள் செலுத்தும் வெறும் 750 ரூபாய் மட்டுமே செலுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு பள்ளி ஆசிரியரைப்போல் வரி செலுத்திவிட்டு, பல கோடிகளை கட்டாமல் மறைத்து வருகிறார். ட்ரம்ப் தவிர அனைத்து அதிபர்களும், ரிச்சர்ட் நிக்சன் அதிபராக இருந்ததிலிருந்து தங்கள் வரிகளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர். இவர் 2016ஆம் ஆண்டு அறிவிப்பாதாகக் கூறி இதுவரை தெரிவிக்கவில்லை' என்றார்

ட்ரம்ப் ஒரு கோமாளி:-

'கரோனா தொற்று உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்ததிலிருந்து மக்கள் கூட்டத்தைக் கூட்டி, ட்ரம்ப் 21 பெரிய பேரணிகளை நடத்தியுள்ளார்' என ஜோ பிடன் குற்றஞ்சாட்டினார்.

அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், 'எனது வார்த்தைகளைக் கேட்க மக்கள் விரும்பி வருகின்றனர். மேலும், இதனால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவும் இல்லை' எனத் தெரிவித்தார்.

பின்னர் ஜோ பிடன்,' ட்ரம்ப் ஒரு ''பொய்யர்''; அவர் ஒரு பொறுப்பற்றவர். மேலும், இவர் மக்களைப் பற்றி என்றும் கவலைப்பட்டதே இல்லை' என சரமாரியாகத் தாக்கிப் பேசினார்.

இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், 'உங்களால் கூட்டத்தைக் கூட்ட முடிந்தால், நீங்களும் அதைத் தான் செய்திருப்பீர்கள். ஆனால், உங்களால் முடியாது. அப்படி கூட்டத்தைக் கூட்ட யாராலும் முடியாது' என்றார்.

இதுகுறித்து ஜோ பிடன், 'இவர் ஒரு கோமாளி. இவரிடம் இருந்து எந்த நல்ல பதிலையும் பெறுவது கடினம்' என்றும், 'இவரை மன்னியுங்கள்' என்று கூறினார்.

இதையும் படிங்க: அதிபர் தேர்தல் 2020: முக்கியத்துவம் வாய்ந்த பொது விவாதத்திற்கு தயாராகும் அமெரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.